Breaking News
அதிமுகவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

அதிமுகவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

அதிமுகவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

தமிழகத்தில் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் என அதிமுகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 7-ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் இரண்டே நாட்களில் மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசின் இந்த செயலுக்கு நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை இந்த நேரத்தில் திறந்தால் ஆட்சிக்கு வரும் கனவை அதிமுக மறந்துவிடவேண்டும் என்றும் கஜானாவை நிரப்ப நல்ல வழி பாருங்கள் என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கராத்தே தியாராஜன், மதுக்கடைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்திய போதும், அதன் கூட்டணியில் உள்ள கார்த்தி சிதம்பரம், டாஸ்மாக்கை திறக்க ஆதரவு தெரிவித்ததாக சுட்டிக்காட்டினார். ஆனால், ரஜினி தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, டாஸ்மாக் விவகாரத்தில் ரஜினியின் கருத்து பாம்புக்கும் நோகாமல் தடிக்கும் நோகாத கதையாக இருப்பதாக என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சித்துள்ளது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனக் கூறிய ரஜினிகாந்த், தற்போது அதிமுக-வுக்கு ஆலோசனை அளிக்கும் விதமாக பேசியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

About அருள்

Check Also

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, …