தமிழ்க் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி.தவராசா கலையரசன்!

தமிழ்க் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி.தவராசா கலையரசன்!

– உறுதிப்படுத்தியது அதிவிசேட வர்த்தமானி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதைத் தேர்தல்கள் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்.ஜே. அபேசேகர, என்.ரத்னஜீவன் எச். ஹூல் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளிலிருந்து தெரிவாகியுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன.

About அருள்

Check Also

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக - மருத்துவமனை தகவல்

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி …