Breaking News
கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் - ஜோ பைடன் வாக்கு

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு

அமெரிக்க மக்கள் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொண்டதாக ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். ஆனால் உண்மையில் நாங்கள் கொரோனா வைரசால் மரணிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். இது ஒரு இருண்ட குளிர்காலம்.

இந்த கொடிய வைரசால் அமெரிக்கா ஏற்கனவே 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்துள்ளது. இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய வரலாற்றில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ். அது குறைந்து வருவதற்கான அறிகுறிகளை காட்டவில்லை. ஒவ்வொரு மாகாணத்திலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஆனால் டிரம்ப் ‘அதிகமில்லை, அதிகமில்லை’ என கூறி வருகிறார்.

கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டம் டிரம்பிடம் இல்லை. அவர் மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதி. அவரது நிர்வாக தோல்வியால் நாம் கைதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் வேறு பாதையை தேர்வு செய்யலாம்.

நாம் ஒன்றிணைந்து உறுதியுடன் அதை எதிர்ப்போம். என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யுங்கள். அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வழி செய்வேன்.

நீங்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும். அனைத்து மாகாணங்களிலும் மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க ஆளுநர்களுக்கு உத்தரவிடுவேன்.

தற்போது ஒரு வாரத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளை ஒரே நாளில் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன். நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். இப்போது நாம் செல்லும் விகிதத்தை விட மிக வேகமாக மறுபுறம் வெளியே வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 24, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …