Breaking News
வெளியேறுவது யார்?

வெளியேறுவது யார்? உள்ளே வருவது யார்? திக் திக் நிமிடங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனை விட வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் யார் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப் போகிறார்கள் என்ற ஆவலே அதிகமாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், போட்டியில் இருந்து 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சண்டை சச்சரவுக்கு குறைவில்லாமல் செல்லும் பிக்பாஸ் சீசன் 2-ல் நாளுக்கு நாள் வீடு களேபரமாக மாறி வருகிறது.

இதையடுத்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் நேற்று எவிக்ஷனில் இருந்து ரித்விகா காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸின் தற்போது இரண்டாவது புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ‘எவிக்ஷன் நெருங்கிட்டு இருக்கு எனக் கமல் சொல்ல, லைட்டா பதட்டமா இருக்கு சார் என்று வைஷ்ணவியும், மொழி தெரியாத படத்துல க்ளைமேக்ஸ்க்கு வெயிட் பண்ற மாதிரி இருக்கு என டேனியலும் சொல்கிறார்.

இதயம் லப் டப் லப் டப்ன்னு அடிக்குது சார் என்று சென்றாயன் தன் மனநிலைமையை விவரிக்க, இந்த வாரம் நீங்க போவிங்கன்னு நினைக்கிறீங்களான்னு வைஷ்ணவியிடம் கமல் கேட்க, எனக்குப் போக வேண்டாம் சார் எனப் பதிலளிக்கிறார் வைஷ்ணவி.

அவங்க பண்ற முடிவு கணிக்கவே முடியல எனும் கமல், அப்போது எலிமினேஷன் கார்டை கையில் வைத்துக் கொண்டு வழக்கமா இத அவங்களுக்குத் தான் காமிப்பேன், காரண கர்த்தா நீங்க தான என்று கமல் ஆடியன்ஸைப் பார்த்து வெளியேறும் நபரின் பெயரை காட்டுவது போல புரொமோ வீடியோ இருக்கிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார் என்பதை விட இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி இருப்பதே பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஆவலை உண்டாகியுள்ளது. இதற்கான க்ளூ நேற்றைய நிகழ்ச்சியிலேயே கிடைத்து விட்ட நிலையில் வீட்டுக்குள் வரப் போகும் அந்த நபர் யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …