Breaking News
Home / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் / இன்றைய ராசிப்பலன் 03 கார்த்திகை 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 23 ஜப்பசி 2019

இன்றைய ராசிப்பலன் 03 கார்த்திகை 2019 ஞாயிற்றுக்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

இன்றைய ராசிப்பலன் 03 கார்த்திகை 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan – 03.11.2019

இன்றைய பஞ்சாங்கம்

03-11-2019, ஐப்பசி 17, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.56 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 12.54 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

ராகு
திருக்கணித கிரக நிலை
03.11.2019
சந்தி
சனி கேது குரு சுக்கி
புதன் (வ) சூரிய செவ்

மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.

கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு உயரும்.

கன்னி
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுக படுத்துவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.

தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழச்சி ஏற்படும்.

மகரம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். நவீன பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.

கும்பம்
இன்று நீங்கள் செய்ய நினைத்த காரியம் செய்வதில் சில இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கிய பாதிப்புகளால் உடல் சோர்வும் மருத்துவ செலவுகளும் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மீனம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

இதையும் பாருங்க :

சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!

Tamil News

Tamil Technology News

Tamilnadu News

World Tamil News

World Newspapers And sites


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

Check Also

இன்றைய ராசிப்பலன் 23 ஜப்பசி 2019

இன்றைய ராசிப்பலன் 14 கார்த்திகை 2019 வியாழக்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!10Shares இன்றைய ராசிப்பலன் 14 கார்த்திகை 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 14.11.2019 …