Breaking News
Today rasi palan – 18.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 18, 2020)

Today rasi palan – 18.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 18, 2020)

Today rasi palan – 18.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 18, 2020)

இன்றைய பஞ்சாங்கம்

18-09-2020, புரட்டாசி 02, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.51 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் காலை 06.59 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் காலை 06.59 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் – 18.09.2020

மேஷம்
இன்று உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிதுனம்
இன்று உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

துலாம்
இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

தனுசு
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். வீண் செலவுகளை தவிர்த்தால் பணப்பிரச்சினைகள் குறையும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.

மீனம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …