Breaking News

Today rasi palan 23.02.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 23 பெப்ரவரி 2020 ஞாயிற்றுக்கிழமை

Today rasi palan 23.02.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 23 பெப்ரவரி 2020 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்
23-02-2020, மாசி 11, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை இரவு 09.02 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.42 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 01.42 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இன்றைய ராசிப்பலன் – 23.02.2020

மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

மிதுனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிம்மம்
இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.

கன்னி
இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை முடியாத காரியங்கள் இன்று எளிதில் முடியும்.

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். வாகன பழுதிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

தனுசு
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்து வாங்குவதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.

மகரம்
இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கும்பம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். நடக்காது என்று நினைத்த காரியம் கூட இன்று நடைபெறும்.

மீனம்
இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா

பிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்!

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 26, 2021)

Today rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 21, 2021)

Today rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 21, 2021)   இன்றைய …