Breaking News
இன்றைய ராசிப்பலன் 01 ஏப்ரல் 2020

இன்றைய ராசிபலன் 07.06.2018

மேஷம்: அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவர்கள்தான் பூமியில் அதிக சக்திவாய்ந்த ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். புத்துணர்வு பெற்றதை நீங்களே உணர்வீர்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். சுய பரிதாபத்தில் நேரத்தை வீணடிக்காமல், வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் துணையிடம் வேறு ஒருவர் அதிக அக்கரை எடுக்க கூடும். ஆனால் இறுதியாக அவர்களுக்குள் தவறாக எந்த விஷயமும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

ரிஷபம்: உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல – சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்கள் தேவைகளுக்கு குடும்பத்தினர் சாதகமாக செயல்படுவதால் இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். புதிய திட்டங்கள் வரலாம். ஆனால் அவசரமாக முடிவு எடுப்பது புத்திசாலித்தனமல்ல. சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள்.

மிதுனம்: மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். உங்கள் துணைவரிடம் ரகசிய தகவலை பகிர்ந்து கொள்ளுமுன் யோசியுங்கள். முடிந்தால் அதைத் தவிர்க்கப் பாருங்கள். அவர் வேறு யாரிடமாவது அதை சொல்லக் கூடும். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். காதலும் சுவையான உணவும் திருமண வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும். இவற்றில் சிறந்த்தை இன்று நீங்கள் பெறுவீர்கள்..

கடகம்: எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணைவர்/துணைவி பற்றி குறை கூற வேண்டாம். ஏற்கனவே அவர் மோசமான மன நிலையில் உள்ளார்.

சிம்மம்: உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் குடும்பத்தினரின் உதவியால் அவற்றை உங்களால் தீர்க்க முடியும். இதெல்லாம் வாழ்வில் சகஜம். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லோருக்கும் எல்லா நேரமும் சூரிய வெளிச்சமாகவோ அல்லது மேகம் மூடிய இருளாகவோ இருந்துவிடாது. இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். சிறிய தடைகளுடன் – இந்த நாள் பெரிய சாதனையான நாளாக அமையும் – தாங்கள் விரும்பியது கிடைக்காததால் மன இறுக்கமாக இருக்கும் சகாக்களை கவனியுங்கள். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள்.

கன்னி: யூகிக்க முடியாத உங்களின் இயல்பு, திருமண உறவை பாதிக்காமல் இருக்கட்டும். இதைத் தவிர்ப்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்படுவீர்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். குடும்பத்தினரின் உதவியால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். லட்சியங்களுக்காக முயற்சிக்க நல்ல நாள். சீக்கிரமே அவற்றை அடைவதற்காக சளைக்காமல் உழைக்க உடலுக்கு ரீசார்ஜ் செய்யுங்கள். இந்த விஷயத்தில் நண்பர்களின் உதவியை நாடலாம். உங்கள் நன்னம்பிக்கையை அது ஊக்குவித்து, குறிக்கோள்களை அடைய உதவும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும்.

துலாம்: உடலை கட்டுக்கோப்பாகவும் மனதை நன்றாகவும் வைக்க யோகாவும் தியானமும் உதவும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். இது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது சில பிரச்சினைகளை ஆரம்பிக்கும் வேலையை செய்வதற்கான நாள் அல்ல. உங்கள் அன்புக்குரியவருக்கானது பிசினஸில் புதிய ஐடியாக்களுக்கு பாசிடிவாக சீக்கிரம் பதில் தெரிவியுங்கள். அவை உங்களுக்கு சாதகமாக அமையும். கடின உழைப்பால் அவற்றை நீங்கள் நிஜமாக்க வேண்டும் – அதுதான் உங்கள் பிசினஸ் நிலையை வெற்றி பெறச் செய்யும் சாவியாகும். வேலையில் ஆர்வத்தை மீட்டெடுக்க அமைதியை பின்பற்றுங்கள். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

விருச்சிகம்: பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். வீட்டில் இணக்கத்தை ஏற்படுத்த நெருக்கமான ஒத்துழைப்பாக செயல்படுங்கள். உங்களை மகிழ்விக்கும் செயல்களை உங்கள் அன்புக்குரியவர் செய்வார். உங்கள் சீனியர்கள் நீங்கள் கூறும் கருத்தினை இன்று புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.. எனவே பொறுமயுடன் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யவும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

தனுசு: மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகம் சாப்பிட்டால் மறுநாள் காலை வயிற்றுக் கோளாறு வரும் என்பதில் கவனமாக இருக்கவும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உரிய காலத்தில் நீங்கள் செய்யும் உதவியால் ஒருவரை துரதிருஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவீர்கள். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். இன்று உங்கள் துணை ஒரு ஸ்பெஷலான பரிசை உங்களுக்கு அளிப்பார்.

மகரம்: டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். மனைவியுடன் பிக்னிக் செல்ல மிக நல்ல நாள். அது உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டுமின்றி, தவறான புரிதலை சரி செய்யவும் உதவும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நீங்கள் ஒன்றாக உழைத்திடுங்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது.

கும்பம்: கடினமான வேலை இருப்பதால் சட்டென கோபம் வரும். பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். உங்கள் குழந்தைக்கு பரிசளிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. அவரவர்க்கான தனிப்பட்ட இடம் திருமண வாழ்வில் முக்கியம். இன்று உங்களது நெருக்கத்தில் காதல் தீ பற்றி எரியும்!

மீனம்: உங்கள் ஆசைகள் மற்றும் லட்சியத்திற்கு பயம் காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதை சமாளிக்க உங்களுக்கு சரியான சில ஆலோசனைகள் தேவைப்படுகிறது. மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் – நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் – அது உங்களுக்கு நல்லதை செய்யும். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். இன்று வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் வேலையில் ஒரு தவறு நிகழக்கூடும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)   இன்றைய …