Saturday , July 21 2018
Breaking News
Home / Astrology / இன்றைய ராசிப்பலன் – 10.07.2018

இன்றைய ராசிப்பலன் – 10.07.2018

இன்றைய பஞ்சாங்கம்

10-07-2018, ஆனி 26, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.15 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 03.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் – 10.07.2018

மேஷம்
இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபார ரீதியாக உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்
இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்
இன்று நீங்கள் வேலையில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திடீர் தனவரவு ஏற்படும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

தனுசு
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். திடீர் பயணம் உண்டாகும். பழைய கடன்கள் குறையும்.

மகரம்
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

மீனம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். கடன்கள் சற்று குறையும். சேமிப்பு உயரும்.


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

Check Also

சாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை

வேற்று சாதி பையனை காதலித்ததால், பெத்த பெண்ணை அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …