Friday , January 18 2019
Home / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய தினபலன் – 08 நவம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய தினபலன் – 08 நவம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்

08-11-2018, ஐப்பசி 22, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.08 வரை பின்பு வளர்பிறை துதியை.
விசாகம் நட்சத்திரம் இரவு 07.48 வரை பின்பு அனுஷம். நாள்முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. கந்த சஷ்டி ஆரம்பம்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் – 08.11.2018

மேஷம்
இன்று மதியம் 01.42 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும்.
குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும்.
குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும்.
கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.
வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும்.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
எதிர்பாராத உதவி கிட்டும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம்.
செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது.
உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.
தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.

துலாம்
இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும்.
குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.
மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை பளு குறையும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள்.
நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.
திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

தனுசு
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளால் நிம்மதி குறையும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும்.
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மகரம்
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும்.
பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.
ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.
வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மீனம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும்.
எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும்.
வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும்.
உங்கள் ராசிக்கு மதியம் 01.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 18-01-2019, தை 04, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 08.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. ரோகிணி …