Breaking News
இன்றைய தினபலன் –25

இன்றைய தினபலன் –25 செப்டம்பர் 2018 – செவ்வாய்க்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்

25-09-2018, புரட்டாசி 09, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.22 வரை பின்பு தேய்பிறை பிரதமை.
உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.01 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 01.01 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹாளய பட்ச ஆரம்பம். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் – 25.09.2018

மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்ககூடும்.
உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ரிஷபம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
சுப செலவுகள் உண்டாகும்.

மிதுனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும்.
பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும்.
வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும்.
தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்
இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும்.
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வங்கி சேமிப்பு உயரும்.

துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

தனுசு
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகலாம்.
உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். பொன் பொருள் சேரும்.

கும்பம்
இன்று நீங்கள் கடினமான முயற்சித்தால் மட்டுமே எடுத்த காரியத்தை முடிக்க முடியும். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.
கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் கிடைக்கும் உதவியால் மனநிம்மதி உண்டாகும்.

மீனம்
இன்று உங்களுக்கு வருமானம் பெருகும். பணபற்றாக்குறை நீங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் விலகும்.
புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …