Wednesday , January 16 2019
Home / சினிமா / 2018-ல் அதிகம் பார்த்த முதல் 10 படங்கள் எது தெரியுமா?
2018-ல்

2018-ல் அதிகம் பார்த்த முதல் 10 படங்கள் எது தெரியுமா?

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் அவை அனைத்துமே பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பெற்று விடுவதில்லை.

தரமாக உள்ள படங்களும், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களும் தான் பெரியளவில் சாதனைப் படைக்கின்றன.

அப்படி இந்த ஆண்டு 2018-ல் இதுவரை வெளியான திரைபடங்களில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களின் பட்டியலை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ரஜினியின் 2.0 திரைப்படம் முதல் இடத்தையும், அடுத்ததாக விஜயின்-சர்கார் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ரஜினியின்- காலா, மணிரத்னத்தின் – செக்கச் சிவந்த வானம், விஷாலின் இரும்புத்திரை, விஜய் சேதுபதியின் 96, நயன்தாராவின்- கோலமாவு கோகிலா, தனுஷின்-வடசென்னை, அதர்வா முரளி, நயன்தாரா நடித்த- இமைக்கா நொடிகள், சூர்யாவின்-தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

Check Also

நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்யுக்கு ‘டும்’ ‘டும்’

மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷுக்கு …