Breaking News

தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்

தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் 70 நாடுகளுக்கும் பரவி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்தனர். இதில் உகான் நகரில் மட்டும் 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 125 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

சீனாவில் இதுவரை 2,943 பேர் இறந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல், தென்கொரியாவில் 29 பேர் கொரோனா வைரசால் இறந்துள்ளனர். மேலும் 477 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இதுவரை 4,812 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மந்திரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜப்பானில் 980 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் உயிரிழந்து உள்ளனர். ஈரானில், 2,336 பேர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 77 ஆக உயர்ந்து உள்ளது.

பிரான்சில், 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 191 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,056 ஆக உயர்ந்து உள்ளது. 89,527 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today rasi palan 04.03.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 04 மார்ச் 2020 புதன்கிழமை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …