Breaking News
ஐஸ்வர்யா

பிக் பாஸ் தமிழ் 2: ட்ரிகர் செய்யும் நடிகர் சதிஷ்; மோதிக்கொள்ளும் மும்தாஜ் – ஐஸ்வர்யா

பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சதிஷின் வருகைக்குப் பின்பு ஐஸ்வர்யாவிற்கும், மும்தாஜுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 43நாட்களைக் கடந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கடைக்குட்டி சிங்கம் டீமை அடுத்து இன்று சிறப்பு விருந்தினர்களாக கஜினிகாந்த் படத்தின் கதாநாயகன் ஆர்யா, சதிஷ், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், டிவி தொகுப்பாளினி டிடி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளனர்.

இதையடுத்து இன்று வெளியாகியுள்ள 3வது புரொமோவில் நடிகர் சதிஷ், ‘இங்க தானே அந்த சம்பவம் நடந்துச்சு என்று கேட்க அதற்கு மும்தாஜ், எல்லாரும் அத பார்த்து ஃபேக்ன்னு நெனைஞ்சாங்களானு கேட்க எனக்குப் பார்த்த உடனே கோவம் வந்துச்சி என்று சதிஷ் சொல்கிறார்.

இதனால் கடுப்பான ஐஸ்வர்யா, மும்தாஜ் ட்ரிகர் பண்ணுறாங்க,அவங்க மேலே நான் குப்பை தண்ணி கொட்டல என்று கோபமாக சொல்ல ஐ வாண்ட் டு லீவ் திஸ் ஷோ ,ஒன்னு நான் இருக்கனும் இல்ல அவங்க இருக்கனும் என்று ஆவேசப்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்கு சதிஷ் வந்த வேலைக் கச்சிதமாக முடிந்து விட்டது. இதனால் இன்றைய போட்டியில் களேபரங்கள் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …