இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா!

- பிரதம அதிதியாக சம்பந்தன் பங்கேற்பு

தமிழர் தலைநகரான திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் விழா நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ச.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பொங்கல் பூஜை நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும், கெளரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் இம்மானுவல் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், திருகோணமலை நகர சபைத் தலைவர் நா.இராஜநாயகம், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஜி.ஞானகுணாளன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குருக்கள், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் உள்ளிட்ட இந்து, கிறிஸ்தவ மதகுருமார், பொதுமக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close