Breaking News
பூவரசன் தீவு பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

பூவரசன் தீவு பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

பூவரசன் தீவு பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவு பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனிப்பட்ட குரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் 26 வயதான அப்துல் மனாப் முகமட் சபான் என அடையாளம் காணப்பட்டுதுடன் கொலைசெய்ப்பட்டவர் சூரங்கல், கிண்ணியா-5, பிரதேசத்தில் வசிப்பவர் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை சம்பந்தமான விசாரணையில் இரு சகோதரர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சகோதரர்கள் 22,20 வயதுடைய நெடுந்தீவு,கிண்ணியா-5 பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

 

யாழில் மிட்டும் வெள்ளை வேன…?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …