Breaking News

அமெரிக்கா வரலாற்றில் நான்காவது அதிபர்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டினார், பிடனுக்கு எதிராக உக்ரைன் அதிபரிடம் சதி செய்ய பேரம் பேசினார் என்று டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் முலம் அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கும் டிரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை இரண்டிலும் வெற்றி பெற்றால், டிரம்ப் தனது பதவியை இழக்க நேரிடும். இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டிரம்ப், அதிபருக்கு எதிராக பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வருவது, நாட்டின் மீதான அவமதிப்பு என கூறியுள்ளார்.

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, லாஸ் ஏஞ்சலிஸ், டென்வர், லூசியானா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் பேரணி சென்றனர்.

இந்நிலையில் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு, டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில் பதவி நீக்க தீர்மானம் எந்த சட்டத்தின் கீழும் அடங்காது என்று குறிப்பிட்டுள்ளார். தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கும் அதிகாரம் பெற்ற 435 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு இங்கு 233 உறுப்பினர்களும் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களும் உள்ளனர்.

இதனால் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்-க்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறும். அதன்பின் இந்த வாக்கெடுப்பு செனட் சபையில் நடைபெறும்.

அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புகள் அதிகம்.

அமெரிக்காவின் 240 ஆண்டு கால வரலாற்றில், 3 அதிபர்கள் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1868- ஆம் ஆண்டு தனது அரசியல் எதிரிகளைக் கொல்ல தூண்டியதாக அப்போதைய அதிபர் ஆண்ரூ ஜான்சன் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதில் அவர் செனட் சபையில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.1974 – ஆம் ஆண்டு வாட்டர் கேட் ஊழலில் சிக்கிய ரிசர்ட் ஜான்சன் மீது பதவி நீக்க திர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஓட்டெடுப்பைச் சந்திக்கும் முன்பே நிக்சன் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

இதேபோல் 1998- ஆம் ஆண்டு அதிபர் கிளிண்டன் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

வெள்ளை மாளிகை பெண் ஊழியரான மோனிகா லுவன்ஸ்கி-யுடன் பாலியல் உறவு கொண்டதாக எழுந்த புகாரில், கிளிண்டன் பொய் கூறியதால் பதவி நீக்கம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இந்த தீர்மானம் பிரிதிநிதிகள் மற்றும் செனட் சபைகளில் தோற்கடிக்கப்பட்டது.

நாளை இந்தியாவுக்குப் பறக்கிறார் சம்பந்தன்!

எம்.ஜி.ஆரின் நினைவு நாள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …