Breaking News
பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறையில் இருக்கையில் அமர்ந்த டிரம்ப் ஆதரவாளர்

பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறையில் இருக்கையில் அமர்ந்த டிரம்ப் ஆதரவாளர்

பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறையில் இருக்கையில் அமர்ந்த டிரம்ப் ஆதரவாளர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்த நிலையில் திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்களை தடுக்க பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் அதிக அளவில் இருந்ததால் நிலைமையை கட்டுப்படுத்தமுடியவில்லை.கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. ஆனாலும், டிரம்ப் ஆதரவாளர்கள் பலரும் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

அவர்களில் சிலர் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள சபாநாயகர் நான்சி பெலோச்சியின் அலுவலகத்திற்கு சென்றனர். அந்த அறையில் இருந்த சபாநாயகர் நான்சின் பெலோச்சியின் இருக்கையில் டிரம்ப் ஆதரவாளர் அமர்ந்தார். தனது காலை மேஜையின் மேல் வைத்தவாறு அந்த நபர் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம்

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …