Breaking News
ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. அங்கு மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் தொடர்ந்து அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. இதன்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், வெற்றி பெற்றதாக ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டன.

ஆனால் இதை குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்க மறுத்து பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இருப்பினும் தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில் வரும் 14ஆம் தேதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளின் ஓட்டுக்களும் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று திரண்ட டிரம்ப் ஆதரவாளர்கள், ஜோ பைடனின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘தேர்தல் வாக்குகளை திருடாதீர்கள்’ என்று முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பேரணி நடத்தினர். இந்நிலையில் அங்கு ஜோ பைடனின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து கோஷங்களை எழுப்பியதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

தொடர்ந்து ஜார்ஜியா, பென்சில்வேனியா, மிச்சிகன், அரிசோனா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Today rasi palan – 13.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 13, 2020)

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …