Breaking News
அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க தயாரில்லை

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க தயாரில்லை

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க தயாரில்லை

இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கத் தயார் என்ற கருத்தை ஏற்க தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைத்தால், அதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாயின் அதற்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாகவும், ஆனால், அது அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவாக அமையாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை முக்கிய செய்திகள் 20/06/2020

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …