இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இரு இளம் யுவதிகள் யாழில் தற்கொலை!

இரு இளம் யுவதிகள் யாழில் தற்கொலை!

 

யாழ்ப்பாணத்தில் இரண்டு இளம் யுவதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி. மற்றவர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர்.

மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது – 20) என்ற இளம் யுவதி நல்லூர் – சங்கிலியன் பகுதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவி, கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ். ரயில் நிலைய வீதிப் பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (வயது – 17) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் நேற்று முற்பகல் 11 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு இளம் யுவதிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், காதல் பிரச்சினையே இவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இரு இளம் யுவதிகள் யாழில் தற்கொலை!

இன்றைய ராசிப்பலன் 06 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை – Today rasi palan 06.02.2020 Thursday

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close