Breaking News
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 744 பேர் பலி

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 744 பேர் பலி

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 744 பேர் பலி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 21,49,551 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் அதிக அளவாக மேலும் 744 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 051 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனால் பதற்றத்திலுள்ள மற்ற உலகநாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவிலும் வரும் 31 ஆம் தேதி வரை இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.90 கோடியாக உயர்வு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …