இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது ‘யானை’ப் படை!

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது ‘யானை’ப் படை!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தலைமைத்துவப் பிரச்சினையால் ஐக்கிய தேசியக்க ட்சி இரு அணிகளாகப் பிரிந்துள்ளது. கட்சித் தலைமைப் பதவி சஜித்துக்கு வழங்க வேண்டும் என சஜித் அணியும், பொதுத் தேர்தலின் பின்னரே தலைமைப் பதவியில் மாற்றம் இடம்பெறுவது பற்றி பரீசிலிக்க வேண்டும் என ரணில் அணியும் வலியுறுத்தி வருகின்றன.

பொது வெளியில் இரு அணிகளும் கடும் சொற்சமரில் ஈடுபட்டு வருகின்றன. மறுபுறத்தில் கட்சியை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது. தலைமைத்துவப் பிரச்சினை, அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.

2023 வரையில் கட்சித் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க ரணில் தயாரில்லை என்றும், கூட்டணியின் தலைமைப் பதவியை சஜித்துக்கு வழங்க அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது ‘யானை’ப் படை!

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு தள்ளிவைப்பு

 

Tamil News

 

 

 

Tamilnadu News

 

 

 

World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close