Breaking News

ஐ.தே.கவை ஒருபோதும் முடக்கிவிடவே முடியாது!

“நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, உரிய நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் பின்பற்றப்படாமல் அவருடைய வீடு பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டமையானது அரசியல் பழிவாங்கல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே என்பது தெளிவாகின்றது. ஆனாலும், இவ்வாறான செயற்பாடுகளால் எம்மை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமையை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, இதற்கு எதிராக நாம் ஒருமித்து வலுவாகப் போராடுவதற்கும் தயாராக இருக்கின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்வதற்கு முன்பதாக அது குறித்து சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், சம்பிக்க ரணவக்கவின் இல்லத்துக்குள் நுழைந்த பின்னரே பிரதி சபாநாயகருக்கு இவ்விடயம் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும், அத்தகைய உரிய நடைமுறைகள் எவையும் இவ்விடயத்தில் பின்பற்றப்படாத நிலையில் இது சட்டத்துக்கு முரணான கைது என்றே கூறவேண்டியிருக்கின்றது” – என்றார்.

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …