Breaking News

அமெரிக்காவில் 7 கோடி முதல் 15 கோடி பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம்

அமெரிக்காவில் 7 கோடி முதல் 15 கோடி பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம்

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குழு கூட்டத்தில் பேசியபோது இந்த தகவலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரசிதா த்லாய்ப் அளித்தார்.

ரசிதா த்லாய்ப் கூறியதாவது:-

அமெரிக்காவில் 7 கோடி முதல் 15 கோடி பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. 2 வகையிலான அடிப்படைகளை வைத்து அமெரிக்க நாடாளுமன்ற மருத்துவர் பிரையன் மோனஹன் இந்த மதிப்பீடுகளை அளித்துள்ளார். மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ரசிதா த்லாய்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 கோடியாகும். ரசிதா த்லாய்ப்பின் மதிப்பீடுகளை வைத்து பார்க்கையில் சுமார் 46 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …