Breaking News
டிரம்ப், ஜோ பைடன் இடையிலான 2-வது நேரடி விவாதம் ரத்து

டிரம்ப், ஜோ பைடன் இடையிலான 2-வது நேரடி விவாதம் ரத்து

டிரம்ப், ஜோ பைடன் இடையிலான 2-வது நேரடி விவாதம் ரத்து

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையே 3 முறை நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி குடியரசு கட்சி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கும் இடையே கடந்த மாதம் 29-ந் தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.

இந்த விவாதம் கூச்சலும் குழப்பமுமாக முடிந்த நிலையில், 2-வது விவாதத்தை வருகிற 15-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் டிரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.

இதற்காக 4 நாட்கள் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த 5-ந் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். ஆனாலும் டிரம்ப் வைரசிலிருந்து மீண்டு விட்டாரா என்பது தெரியாத நிலையில் அவருடன் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று ஜோ பைடன் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதையடுத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையிலான விவாதத்தை காணொலிக் காட்சி வாயிலாக நடத்த விவாதக்குழு முடிவு செய்தது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப் காணொலி காட்சி விவாதத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். மேலும் டிரம்ப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அவரது மருத்துவரே தெரிவித்துவிட்டதால் நேரடி விவாதத்தை நடத்த வேண்டும் என டிரம்பின் பிரசார குழு கோரிக்கை விடுத்தது.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத விவாதக்குழு 2-வது விவாதத்தை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது. இதையடுத்து டென்னிசி மாகாணம் நாஷ்வில்லில் வருகிற 22-ந் தேதி 3-வது மற்றும் இறுதி விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவை மீறிய 101 பேர் கைது

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …