இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

பிரிட்டனுடன் இணைந்து அமெரிக்காவும் கோட்டா அரசுக்கு கடிவாளம்!

- அந்நாட்டு உதவி இராஜாங்க செயலாளர் கூட்டமைப்புடன் கொழும்பில் இன்று பேச்சு

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மான விவகாரம் தொடர்பில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸ், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மார்ச் 22ஆம் திகதி வரை அது நடைபெறுகின்றது. அதில் மார்ச் 20ஆம் திகதி இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பரிசீலனைக்கு வரவிருக்கின்றது.

இந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கையின் தற்போதைய கோட்டாபய அரசு ஒரு தலைப்பட்சமாக விலகினால் எவ்வாறான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி கரேத் பெய்லி நேற்றுமுன்தினம் ஆராய்ந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸும் ஐ.நா. தீர்மான விவகாரம் தொடர்பில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close