Breaking News

சீனா மீது 20 டிரில்லியன் டாலர் கேட்டு அமெரிக்க வக்கீல் வழக்கு

சீனா மீது 20 டிரில்லியன் டாலர் கேட்டு அமெரிக்க வக்கீல் வழக்கு

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கடுமையாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக அமரிக்காவின் பிரபல வக்கீல் ஒருவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் சீனாவிடம் இருந்து 20 டிரில்லியன் டாலர்களை அவர் நஷ்டஈடாக கோரியுள்ளார். இந்த வழக்கை அவர் டெக்சாஸின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.

இலங்கை போன்ற நாடுகளும் சீனாவுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா வக்கீல் கேட்டுள்ளார்.

லாரி கிலாய்மான் என்ற இந்த வக்கீல் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின நிர்வாகத்தின் கீழ் அரசு வக்கீலாக இருந்தவராவார்.

இந்தநிலையில் தாம் இலங்கையர்கள் உட்பட்டவர்களுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக செயற்பட எதிர்பார்ப்பதாக கிலாய்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது. போரின் உயிரியல் ஆயுதமாகவே அதனை சீனா உருவாக்கியது.இந்தநிலையில் சீனாவின் இந்த உயிரியல் ஆயுதம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரானது.

அத்துடன் இதனை உகானில் உள்ள நச்சு உயிரியல் தொடர்பான படிப்பியல் நிறுவனத்தில் இருந்து பொறுப்பற்ற வகையில் வெளியில் பரப்பியதன் மூலம் அங்குள்ள பணியாளர்கள் சமூகத்தில் பரவுவதை தடுக்க தவறிவிட்டனர்.

அதேநேரம் அமெரிக்காவில் பெருகவும் வழிவகுத்தனர் என்றும் அமெரிக்க வக்கீல் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 27.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை

தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1100 பேர் மீது வழக்கு

Tamil News
Tamilnadu News
World Tamil News

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …