Breaking News
தந்தை பெரியார்

தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜா தான் காரணம்

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை பஸ் நிறுத்தத்தில் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ளது. தினமும் அந்த சிலை அருகே உள்ள கரும்பலகையில் பெரியாரின் வாசகங்களை எழுதுவதை அப்பகுதி திராவிடர் கழகத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 4.45 மணியளவில் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் செபாஸ்டியன் பெரியார் வாசகத்தை எழுத வந்தபோது, அவரின் கைத்தடி உடைந்து கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, போலீசாரிடம் செபாஸ்டியன் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய விஷமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்திய உபகண்டத்துக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கியவர் அறிவாசான் தந்தை பெரியார். அவரின் சிலையை உடைக்கவேண்டும் என்று பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறை கொத்தடிமை வேலை செய்கிறது.

பொது அமைதிக்கு விரோதமாகப் பேசியதாக கருணாஸை கைது செய்த காவல்துறை ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் காவல்துறை பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்” என ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …