Monday , December 17 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / பிக் பாஸ் வீட்ல 100% யாரும் நேர்மையா இல்ல: என் கேரக்டரையே நாசம் பண்ணிட்டாங்கனு கண்ணீர்விடும் வைஷு மாதா!
பிக் பாஸ் வீட்ல 100%

பிக் பாஸ் வீட்ல 100% யாரும் நேர்மையா இல்ல: என் கேரக்டரையே நாசம் பண்ணிட்டாங்கனு கண்ணீர்விடும் வைஷு மாதா!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரும் 100% நேர்மையாக இல்லை என்று வைஷ்ணவி கண்ணீர் வடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்‌ஷனுக்கு ஜனனி, பொன்னம்பலம், சென்ராயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் யாரும் 100% நேர்மையாக இல்லை என வைஷ்ணவி புலம்புகிறார். இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியாகியுள்ள புரொமோவில், மும்தாஜ் மற்றும் பாலாஜியிடம் வைஷ்ணவி தனது வேதனையை கொட்டித் தீர்க்கிறார்.

யாருமே நேர்மையாக இல்லை என்று நீ எப்படி முடிவெடுப்ப என்று மும்தாஜ் எகிறுகிறார். எனினும், இருவரும் வைஷ்ணவியை சமாதனம் செய்ய முற்படுகின்றனர். ஆனால், வைஷ்ணவியோ, இந்த வீட்டிற்குள் உள்ள சிலர் தனது கேரக்டரையே நாசம் செய்துவிட்டதாக கூறி கண்ணீர்விடுகிறார்.

5 நிமிஷத்துல இங்க இருக்க எல்லாரையும், ஆட்ட பிரிக்கிற மாதிரி மாட்ட பிரிக்கிற மாதிரி பிச்சி பிச்சி பிச்சி காட்டீர்வேன் என்னால அது முடியும்னு ஒரு உள்குத்தோடு பேசுகிறார். வைஷ்ணவியிடம் ஏதோ மாஸ்டர் ப்ளான் இருக்குனு இதில் இருந்து தெரிகிறது

Check Also

இந்திய

என்னது ரூ.1000 கோடியா…? 2.0 கலெக்‌ஷன் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாணட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2.0 திரைப்படம் நவம்பர் மாதம் …