வனிதாவை வெறித்தனமாக தாக்கிய பிரதீப் ரசிகர்… வலியால் துடிதுடித்துப்போன வனிதா

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததை வரவேற்று பேசியதால் அவரின் ரசிகர் தன்னை நடுரோட்டில் வைத்து தாக்கியதாக வனிதா விஜயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை வனிதா ரிவ்யூ செய்யும் ஷோ ஒன்று தினமும் பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றது.

அதில் தினசரி நடக்கும் நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசி வருகிறார் வனிதா. அந்த வகையில் இந்த சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம் தான். அதனை வனிதா ரிவ்யூ செய்தபோது ரெட் கார்டு கொடுத்தது சரி தான் என பேசி இருந்தார். இதற்கு பிரதீப் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அது நடந்து 2, 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று நள்ளிரவு நடிகை வனிதா விஜயகுமாரை மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பிரதீப் ரசிகர் தான் தன்னை தாக்கிவிட்டதாக கூறி நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Related Posts