Friday , 25 April 2025

VAT வரி சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Spread the love

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 4 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும்.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News