Wednesday , August 15 2018
Breaking News
Home / Videos / Bigg Boss Tamil Season 2 / பிக் பாஸ் தமிழ் 2: ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல்!
தமிழில்

பிக் பாஸ் தமிழ் 2: ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் அல்லாமல் பிற மொழியில் பேசிய ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல் செய்யப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தமிழில் பேச வேண்டும் என்பதை மீறி பிற மொழிகளில் பேசுவது குறித்து குறும்படம் ஒன்று பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், பெங்காலியில் ’கிழவன் என்கிட்ட அடிவாங்க போறான்’ என்று ஐஸ்வர்யா கூறியது குறும்படத்தில் அம்பலமானது.

இதைப்பற்றி போட்டியாளர்கள் விவாதிக்க யார் அந்த கிழவன் என்ற கேள்வி எழுந்தது, ஒன்றுமே இல்லாததை ஊதி ஊதி பெரிதாக்கும் வைஷ்ணவி பிரச்னையை ஒரேடியாக ஊதித்தள்ளிவிட்டார் போல. அந்த கிழவன் பொன்னம்பலம் தான் என எனக்கு மட்டுமா தோனிச்சு உங்களுக்கும் தோனிச்சில என்று ஜனனியிடம் கேட்ட வைஷ்ணவியின் வாயை ஐஸ்வர்யா அடைத்துவிட்டார்.

உண்மையில் ஐஸ்வர்யா கூறியது என்ன? எதை பற்றி? எதற்காக கூறினார் என்பது குறும்படத்தில் காண்பிக்கப்பட்டதா என பல கேள்விகள் எழுந்துள்ளன. இதன் மூலம் பிரச்னையை கிளப்பிவிட பிக் பாஸ் திட்டம் போட்டாரா அல்லது தானாகவே பிரச்னையாக மாறியதா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் – 15 ஆகஸ்ட் – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 15-08-2018, ஆடி 30, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 01.52 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்தம் …