Breaking News
வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி

வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி

வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி

வியன்னாவில் ஒரு சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரியாவின் உள்துறை மந்திரி இது குறித்து கூறுகையில், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், துப்பாக்கிச் சூடு பல நபர்களால் நடத்தப்பட்டதாக கூறினார்.

மேலும் சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மற்றொரு நபர் தப்பி ஓடியதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வியன்னாவில் உள்ள யூத சமூகத்தின் தலைவரான ஒஸ்கர் டாய்ச் கூறுகையில், நகரத்தின் பிரதான சர்ச்சில் அமைந்துள்ள தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது, ஆனால் வழிபாட்டு தலம் மீது குறிவைக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நேரத்தில் சர்ச் மூடப்பட்டதாக டாய்ச் டுவீட் செய்துள்ளார்.

நகரின் மையத்தில் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் திறந்தவெளி மற்றும் பொது போக்குவரத்தையும் மக்கள் தவிர்க்குமாறு போலீசார் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …