Breaking News
விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு பலனற்றவை- அமைச்சர் டக்ளஸ்

விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு பலனற்றவை- அமைச்சர் டக்ளஸ்

விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு பலனற்றவை- அமைச்சர் டக்ளஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் வீணைக்கு வாக்களித்த மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கையும் எதிர்பார்ப்புக்களும் வீண் போகாத வகையில் தன்னுடைய வேலைத் திட்டங்கள் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், தன்னுடைய நாடாளுமன்ற கன்னி உரையில் வெளியிட்ட கருத்துக்களை சமூக ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படுகிறது.

எனினும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ எந்தவிதமான தீர்வினை இது பெற்றுத் தராது எனவும் பாதகங்களையே அதிகரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பலமான மத்திய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், குறித்த அரசாங்கத்துடன் தனக்கு இருக்கும் தேசிய நல்லிணக்கத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, தனியார் போக்குவரத்து சங்கங்களின் உரிமையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அமைச்சரினதும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதன் ஊடாகவும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் அடங்கிய கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் 2 ஆண்டுகளில் முடிந்து விடும்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …