தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் ஐடியா மணி சு. சுவாமி!

விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் ஐடியா மணி சு. சுவாமி!

வருமான வரித்துறையினர் மீது விஜய் வழக்கு தொடரலாம் என சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை கூறியுள்ளார்.

பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.

ஒரே இரவில் விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

பல மணி நேரமாக பனையூர் வீட்டில் நடந்த விசாரணை நேற்று இரவு முடிவுற்றது.

விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து வரப்பட்டதால் மாஸ்டர் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒன்றும் இல்லை என்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும்.

படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால் விஜய் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வழக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளார்.

சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்

பல்கலை மாணவ சமூகத்தினால் யாழ். சமூகத்துக்கே பேரவமானம்!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close