தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

விஜய்யின் ஆடிட்டர் ஆஜராகி விளக்கம்!

வருமானவரித் துறை விவகாரம்

விஜய்யின் ஆடிட்டர் ஆஜராகி விளக்கம்!

பிகில் பட வசூல் தொடர்பான வருமானவரித் துறை நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க விஜய்யின் ஆடிட்டர் ஆஜராகி உள்ளார்.

பிகில் படத்தின் வசூலை குறைத்து காட்டியதாக பிகில் பட தயாரிப்பாளாரான ஏஜிஎஸ் நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

படப்பிடிப்பில் இருந்த விஜய் இதற்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அழைத்துவரப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த விளக்கங்களை அளிக்க பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் நடிகர் விஜய் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதை தொடர்ந்து விஜய் மற்றும் அன்புசெழியன் நேற்று ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவருமே ஆஜராகவில்லை.

இருவர் தரப்பிலிருந்தும் அவரவர் ஆடிட்டர்கள் மட்டும் ஆஜராகி வருமானவரித்துறைக்கு விளக்கங்களை அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் அறிமுகபடுத்தப்படும்: டெட்ரோஸ் அதானோம்

கொரோனாவால் 50,000 பேர் பலி? சீனர் கூறுவது உண்மையா?

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close