சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

இறைச்சி கடைக்காரர்களுக்கு பரிசு கொடுத்த விஜய் ரசிகர்கள்

இறைச்சி கடைக்காரர்களுக்கு பரிசு கொடுத்த விஜய் ரசிகர்கள்

அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அமர்ந்திருக்கும் பிகில் பட போஸ்டர் தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி கறிக்கடை உரிமையாளர்கள் கோபால் என்பவரது தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் மனு அளித்திருந்தனர்.

பிகில்
இந்நிலையில் கோவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இறைச்சி வெட்டும் கட்டைகளை இறைச்சி கடைக்காரர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளனர். இறைச்சி வெட்டும் கட்டைகளை பரிசாக வழங்கி அவர்களை விஜய் ரசிகர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்

பிக்பாஸில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது ஏன்?… நியாயம் கேட்கும் பார்வையாளர்கள்

Tags
Show More

Related Articles

Back to top button
Close