சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

அடுத்த படத்தில் அரசியல் பேசுவாரா விஜய்?

விஜய் நடித்த முந்தைய படங்களான ’மெர்சல்’, ’சர்க்கார்’ மற்றும் ’பிகில் ஆகிய மூன்று படங்களின் ஆடியோ விழாக்களிலும் விஜய் பேசிய அரசியல் குறித்த பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

ஆளும் கட்சியை பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் பல விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், இதனால் இந்த படத்தின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது இது ஒருபுறமிருக்க விஜய் படத்தை தயாரித்து பெரும் நஷ்டம் அடைந்த ஒரு தயாரிப்பாளர் இது குறித்து கூறுகையில்

’விஜய்யின் அடுத்த படம் கிட்டத்தட்ட அவரது சொந்த படம் என்றும், அந்த படத்தை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தயாரிக்கிறார் என்றும், எனவே அந்த படத்தின் ஆடியோ விழாவில் விஜய் நிச்சயம்அரசியல் பேச மாட்டார் என்றும் கூறுகின்றார்.

அதேபோல் அந்த படத்திலும் எந்தவிதமான சர்ச்சைக்குரிய வசனங்களும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னுடைய சொந்தப் படம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் விஜய், அதேபோல் மற்ற தயாரிப்பாளர் படங்களையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமன்றி விஜய்யின் கடந்த மூன்று படங்களுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்றும் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை நெருங்கிய பட்ஜெட் படங்கள் என்றும், ஆனால் அவருடைய அடுத்த படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகிறது என்றும் அவர் மேலும் கூறியது பலரை யோசிக்க வைத்துள்ளது

பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?

Tags
Show More

Related Articles

Back to top button
Close