Breaking News
கருணாநிதி பழைய

கருணாநிதி பழைய கம்பீர குரலோடு நலம் பெற வேண்டும்: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி பழைய கம்பீர குரலோடு நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கு தொற்றால் அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல்நலமும் நலிவுற்றுள்ளது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் கருணாநிதி உடல்நலம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கருணாநிதி விரைவில் உடல் நலம்பெற்று மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …