Breaking News

பிக் பாஸ் வீட்டிற்காக ‘நாயகி’ சீரியலை கைவிட்ட விஜயலக்ஷ்மி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற ’நாயகி’ சீரியலில் இருந்து நடிகை விஜயல்க்ஷ்மி விலகியுள்ளார்.

சன் டிவியில் பிரைம் டைம் சீரியலான ‘நாயகி’ சீரியலில் இருந்து அதன் நாயகி விஜயலக்ஷ்மி விலகுவதாக அறிவித்தார். விஜயலக்ஷ்மியின் இந்த திடீர் முடிவு ‘நாயகி’ ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. பெரும்பாலானோர் விஜயலக்ஷ்மி எடுத்த அதிரடி முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.

அப்போது, மக்களிடம் இத்தனை பெரிய வரவேற்பினை பெற்ற சீரியலில் இருந்து விலகுவதற்கு பின்னால் மிகப்பெரிய ஒரு விஷயம் இருப்பதாகவும், தொடர்ந்து மக்களின் அன்பு தனக்கு வேண்டும் எனவும் விஜயலக்ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் இன்றைய எபிசோட்டில் விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். இதற்கான புரொமோ வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘பிக் பாஸ் வீட்டில் நான் நானாக இருக்கப்போகிறேன். உங்களது ஆதரவு வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் ரசிகர்கள் விஜயலக்ஷ்மியை அன்போடு வரவேற்றாலும், ‘நாயகி’ ரசிகர்கள் மீண்டும் நாயகியாக விஜயலக்ஷ்மி வர வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய அனுபவத்தை பெறப்போகும் விஜயலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

About அருள்

Check Also

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …