Breaking News
உன்ன விட நான்

உன்ன விட நான் ஒரு படி மேலே தான்:வலுக்கும் ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்கை யார் ஒழுங்காகச் செய்வது என்ற சண்டையில் ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி நேரடியாக மோதிக் கொள்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை எட்டியுள்ளது.பிக் பாஸ் வீட்டில் உள்ள எஞ்சிய போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்குள் செல்ல, அவர்களுக்கு தனித்தனியாக டாஸ்க்குகள் வழங்கப்படும் என பிக் பாஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, முதலில் யாஷிகாவுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது. அதை யாஷிகா வெற்றிகரமாகச் செய்து முடித்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது.இதில் ஐஸ்வர்யாவுக்கு, விஜிக்கும் முட்டிக் கொண்டது.

இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘இதுவரைக்கும் நீங்க பண்ண டாஸ்க்லாம் எப்படி பண்ணீங்க என்று விஜி ஐஸ்வர்யாவிடம் கேட்க, நான் பஸ்ட் டாஸ்க்லாம் எப்படி பண்ணேன், எப்படி இருந்தாலும் பண்ணிட்டேன் தான் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். அதற்கு விஜி டாஸ்க்குன்னு பார்க்கும் பொது நான் உங்கள விட ஒருபடி மேலே தான் என்று கூறி கடுப்பேற்றுகிறார்.

இருவருக்கும் இடையில் பஞ்சாயத்து செய்யும் பாலாஜி மொளகா பொடி போடுறது எப்படி ஸ்டேட்டர்ஜியாகும் என்று ஐஸ்வர்யாவிடம் நியாயம் கேட்க இது பிக் பாஸ் பஸ்ட் சீசன்ல இருந்து இருக்கு, நீங்க எல்லாரும் என்ன டார்கெட் பண்ணுறீங்கன்னு’ ஐஸ்வர்யா சொல்கிறார்.

கடந்த சில நாட்களாகவே ஐஸ்வர்யாவுக்கும், விஜயலக்ஷ்மிக்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. அதே போல் இன்றும் கண்டிப்பாக பிக் பாஸ் ஹவுஸில் சண்டை சச்சரவுக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …