தமிழ் கவிதைகள்

“விதியும் நம் கையிலே…..”

“விதியும் நம் கையிலே…..”

நம் வாழ்க்கை நம் கையிலே
நாளை என்பது நிச்சயமில்லை
நன்மை செய்வதே முக்கியமானது
நலம் வாழ நல்வாழ்த்துக்கள் உறவுகள்….

உடம்போ சுடுகின்றது
உள்ளமோ வாடுகின்றது
தலையும் சுற்றாமல் சுற்றுகின்றது
வாயும் அதிகம் புளிக்கின்றது
இதயமும் அதிகமாய்த் துடிக்கின்றதே….

சுவாசிக்க முடிகின்றது
வாசிக்க முடியவில்லை
தலையும் வலிக்கின்றதே….
இதுதான் அழகிய காய்ச்சலோ….
முடியவில்லை உறவுகளே….

உடலிலே மாற்றம் ஏற்பட்டவுடனே
உடனடியாக வைத்தியரை நாடுவதே
உடலுக்கும் உள்ளத்திற்கும் சிறந்து
உறவுகளே கவனம் உறவுகளே….

வீட்டிலே இருப்பதோ
வீளையாட்டாக நினைப்பதோ
விபரீதமானது உறவுகளே…..
விதி என்பதும் நம் கையிலே….

அனைவரும் நலம் வாழ
நல்வாழ்த்துக்கள் உறவுகளே….
கோவமேதும் இருந்தால்
மன்னிக்கவும் உறவுகளே….

நல்லதை நினைத்து
நல்லதைச் செய்தால்
நல்லதே நடக்கும்
நன்மையே உண்டாகும்….

வாழ்க தமிழ்
வளர்க மனிதம்….

நீர்வேலி,
த.வினோத்.

vinothan

Tags
Show More

Related Articles

Back to top button
Close