இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வயநாடு

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால், அம்மாநில வயநாடு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில், பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இடுக்கி, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close