இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

- இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றது ஐ.நா.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தல், அது குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவை இடம்பெற வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பதிலைப் பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய பணியைச் செய்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பணியகத்தினரைச் சந்தித்தேன்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றுமே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close