Breaking News
பிக் பாஸ் வீட்டில் பெண்கள்

பிக் பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் வெல்வது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது.

ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை வெல்ல தவறிய, வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பலக்கட்ட எவிக்‌ஷன்களை கடந்து பிக் பாஸ் 2 இறுதிப்போட்டிக்கு ஜனனி, விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு விஷயம் தமிழ் பிக் பாஸில் நிகழ்ந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் பெண்கள்

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ்க்கு தகுதி பெற்ற அனைத்து போட்டியாளர்களும் பெண்களே.

இந்த 4 பெண்களில் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வாக்குகள் அடிப்படையிலும், மக்களின் மனதை வென்றதன் அடிப்படையிலும் முதலிடத்தில் இருப்பவர் ரித்விகா தான்.

மக்கள் மனதில் இடம்பிடிப்பதைவிட வாக்குகளை தான் பிக் பாஸ் எடுத்துக் கொள்வார் என்பதால் ரித்விகாவுக்கு அடுத்ததாக ஐஸ்வர்யா அதிக வாக்குகளுடன் இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து விஜயலக்ஷ்மியும், கடைசி இடத்தில் ஜனனியும் உள்ளனர்.

இதன் மூலம் பிக் பாஸ் இறுதிப்போட்டி ரித்விகாவுக்கும்-ஐஸ்வர்யாவுக்கும் இடையே என தெரிகிறது. இதிலும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவை ஜெயிக்க வைக்க திள்ளுமுள்ளு வேலைகளில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும், ஐஸ்வர்யாவை விட இரண்டு மடங்கு அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் ரித்விகாவே டைட்டிலை வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …