சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

பிகில் பட காட்சிகள் ரத்து உண்மையா? தேவி தியேட்டர் மேனேஜர் விளக்கம்

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான நிலையில் வெள்ளி, சனி ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை தயாரிப்பு தரப்பினர் உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் திங்கட்கிழமைக்கு பின்னர் பிகில் படத்திற்கு திரையரங்குகளில் வெகுவாக கூட்டம் குறைந்துவிட்டதாகவும், காட்சிகள் ரத்து செய்யப்படும் அளவிற்கு தியேட்டரில் பார்வையாளர்கள் இல்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன

குறிப்பாக சென்னை தேவி திரையரங்கில் நேற்று இரவு காட்சியும், இன்று பகல் மற்றும் மதிய காட்சியும் ஒரு திரையரங்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து தேவி தியேட்டரின் மேனேஜர் அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது ’தேவி, தேவி பாரடைஸ் ஆகிய 2 தியேட்டர்களில் பிகில் படத்தை திரையிட்டிருந்தோம்.

ஆனால் போதுமான பார்வையாளர்கள் வராத காரணத்தினால் ஒரு தியேட்டரில் காட்சி ரத்து செய்யப்பட்டது
தேவி மற்றும் தேவிபாரடைஸ் ஆகிய இரு திரையரங்குகளில் சேர்த்து 2000 பார்வையாளர்கள் படம் பார்க்கலாம்.

ஆனால் மழை காரணமாக பார்வையாளர்கள் மிகவும் குறைவாக வந்ததால் ஒரு திரையரங்கில் மட்டும் காட்சி ரத்து செய்யப்பட்டது.

பொதுவாக மழை நேரத்தில் கூட்டம் வரவில்லை என்றால் காட்சிகள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் பிகில் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது ஊடகங்களால் பெரிதுபடுத்தபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் பாருங்க :

சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!

Tags
Show More

Related Articles

Back to top button
Close