உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஈரான் படைத் தளபதியை அமெரிக்கா கொன்றது ஏன்? – ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்

- மத்திய கிழக்கில் 4 அமெரிக்கத் தூதரகங்களை அவர் குறிவைத்தார் எனவும் குற்றச்சாட்டு

“ஈராக் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்குவதற்கு ஈரான் குட்ஸ் படையணித் தளபதி காசிம் சுலைமானி சதித் திட்டம் தீட்டினார். அதனாலேயே அவரைக் கொல்ல நான் உத்தரவிட்டேன்.”

– இவ்வாறு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தபோது ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைப் போராட்டக்காரர்கள் அடித்து, நொருக்கி, தீவைத்து சூறையாடினர். அந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியது.

அந்தத் தாக்குதலுக்கான ஏற்பாடுகளைச் செய்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை.

அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை. இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்கத் தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்குச் சதித் திட்டம் தீட்டியிருந்தார். இது பற்றிய உளவுத் தகவல்கள் கிடைத்த பிறகு அவரைக் கொலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தேன்” – என்றார்.

கடற்படையின் வாகனம் மோதி கணவன் பலி! மனைவி படுகாயம்!!

Tags
Show More

Related Articles

Back to top button
Close