Thursday , July 18 2019
Breaking News
Home / சமையல் குறிப்புகள் / நண்டு வடை செய்வோமா
நண்டு

நண்டு வடை செய்வோமா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

தேவையான பொருட்கள்

நண்டு பெரிய சைஸ் -1/2 கிலோ
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
மஞ்சள் பொடி-1/2 கிலோ
சோம்பு பொடி-1 கரண்டி
பட்டை-2
இஞ்சி-2 அங்குலம்
பொட்டுக்கடலைப் பொடி-4 கரண்டி
சோளமாவு-4 கரண்டி
எண்ணெய்-150 கிராம்
கொத்தமல்லி-1/2 கட்டு
பிரிஞ்சி இலை-1
உப்பு-தேவையான அளவு

தயார் செய்யும் முறை

நண்டை சுத்தம் செய்து குக்கரில் சிறிது நீர் விட்டு மஞ்சள் பொடி, பிரிஞ்சி இலை ஒன்று சேர்த்து வேக விடவும் வெயிட் போட வேண்டாம். நண்டு வெந்து இருக்கும்.

இதன் தசையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதனோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு பொடி, தட்டிய பட்டை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக் கடலையைப் பொடி, சோளமாவு, உப்பு, ஆய்ந்த கொத்தமல்லி சேர்க்கவும்.

பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு இவற்றை ஒன்றாகப் பிசைந்து கையில் எண்ணெய் தொட்டு சிறிய வடைகளாகத் தட்டவும்.இதை எண்ணெயில் சிவக்கப் பொரிக்கவும்.

எண்ணெயில் பொரிக்கும் போது உடைந்தால் முட்டை ஒன்றை உடைத்துக் கலக்கவும்.ரைஸோடு தனியாகவும் பரிமாறலாம்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

வீட்டுக் குறிப்புகள்

சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபுளியை அவ்வபோது கரைத்துகொண்டிருப்போம். இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் …