Monday , January 21 2019
Home / இலங்கை செய்திகள் / மன்னார் உயிலங்குளம் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பேரூந்தின் சாரதியான வில்லியம் மற்றும் 67 பொது மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி

மன்னார் உயிலங்குளம் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பேரூந்தின் சாரதியான வில்லியம் மற்றும் 67 பொது மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி

மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த 1985 ஆம் ஆண்டு பேரூந்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பேரூந்தின் சாரதியான வில்லியம் மற்றும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 67 பொது மக்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று சனிக்கிழமை மாலை அஞ்சலி செலுததியுள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் உயிலங்குளம் பகுதியில் சுடர் ஏற்றி பூ தூவி அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை அரச படைகளினாலும் துணை நடவடிக்கைகளினாலும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழின படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளை மே 12 ஆம் திகதி இன்று சனிக்கிழமை ஆரம்பித்து மே 18 ஆம் திகதி வரை தமிழின படுகொலை நினைவு வாரத்தை அனுஸ்ரிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதன் முதல் நாள் நிகழ்வின் 3 ஆவது நிகழ்வாக மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தில் இன்று (12) அனுஸ்ரிப்பதாகவும் தெரிவித்தார்.

1985 ஆம் ஆண்டு உயிலங்குளத்தில் பேரூந்தில் பயணித்த பயணிகளை இறக்கி இராணுவம் சுட முயற்சி செய்த போது குறித்த பேரூந்தின் சிங்களவரான நடத்துனர் வில்லியம் என்பவர் தன்னை சுட்டு விட்டு மக்களை சுடுங்கள் என்றார்.

-இந்த நிலையில் இலங்கை இராணுவம் அவரை சுட்டு படுகொலை செய்து விட்டு ஏனைய 67 பயணிகளையும் சுட்டு படுகொலை செய்தனர்.
-அந்த இடத்திலே குறித்த நினைவு அஞ்சலியை நடத்துகின்றோம்.

எனவே இந்த படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு ஊடக நீதி கிடைக்க வேண்டும் என்றும் இவர்களது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சர்வதேசத்தினூடாக நீதியை பெற்றுக்கொள்ள தொடர்ந்து போராடுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

ஐ.நா. தீர்மானம் நிறைவேறுவதை தடுக்க மைத்திரி முயற்சி!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் தீவிரமான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் …